பாஸ்-பெர்சத்து கட்சிகள் இடையிலான பிணக்கு   சிலாங்கூர் PN-ஐ பலவீனப்படுத்தும்

1 ஜனவரி 2026, 6:21 AM
பாஸ்-பெர்சத்து கட்சிகள் இடையிலான பிணக்கு   சிலாங்கூர் PN-ஐ பலவீனப்படுத்தும்

ஷா ஆலம், 31 டிசம்பர்: பெரிகாத்தான் நேஷனல் (PN) -ஐ பீடித்துள்ள நெருக்கடி, குறிப்பாக சிலாங்கூரில், ஒற்றுமை அரசு நிர்வாகத்துக்கு நன்மை அளிக்கும் என்று மலாயா பல்கலைக்கழக (UM) அரசியல் ஆய்வாளர் கூறினார்.

சிலாங்கூரில் PN இப்போது அடக்கம் செய்யப் பட்டு விட்டது என்று உருவகப்படுத்திய டாக்டர் முகமட் தௌஃபிக் யாக்கூப், PAS மற்றும் BERSATU கூட்டணியின் அரசியல் ஒத்துழைப்பில் இனி தெளிவான பார்வை இல்லை என்றார். “என்னைப் பொறுத்தவரை சிலாங்கூர் PN இதுவரை நடந்தவற்றால் அடக்கம் செய்யப் பட்டு விட்டது.

PN வளர்ச்சி அடைந்து, ஒருவருக்கொருவர் இடையே உறவை பேணும் திறன் கொண்ட தெளிவான பார்வை இல்லை.இது ஒற்றுமை அரசின் அரசியல் ஸ்திரத் தன்மையையும், உண்மையான உறவையும் சிலாங்கூர் மாநில நிர்வாகத்தின் ஒருமைப்பாட்டில் வெளிப் படுத்தும் வாய்ப்பு.

PN நெருக்கடியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்த தேர்தலில் சிலாங்கூர் ஒற்றுமை அரசுக்கு கூடுதல் இடங்களை வெல்லும்  வாய்ப்பு  பிரகாசமாக உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். இது ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தி, மக்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும். எதிர்க் கட்சிகள் எப்போதும் அரசியல் செய்வதை விட மக்கள் நலனுக்கு உழைப்பது சிறப்பு என” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

நேற்று, டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி PN பொதுச் செயலாளர் மற்றும் சிலாங்கூர் PN தொடர்பு அமைப்புத் தலைவர் பதவிகளை ராஜினாமா செய்தார். இது வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும்.இதைத் தொடர்ந்து, தாமான் மேடான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அஃபிஃப் பஹார்டின், சிலாங்கூர் PN செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதுவும் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும். இதற்கிடையில், உத்தர மலேசியா பல்கலைக்கழக (UUM) அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் முகமட் அஜிசுடின் முகமட் சானி, சிலாங்கூரில் PAS மற்றும் BERSATU கூட்டணி தொடர்ந்து பிளவுபடும் என்று கணித்தார்.

இது அவர்களின் மாநில சட்டமன்ற (DUN) நிலையை பாதிக்கும்.“இந்த நெருக்கடியின் தாக்கம் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது, சிலாங்கூரிலும் நடக்கிறது. PAS மற்றும் BERSATU பிளவுபடும், DUN-இல் அவர்களின் நிலையும் மாறலாம்.அவர்களின் நிலையைப் பார்க்க வேண்டும், எதிர்க்கட்சி இருக்கைகளில் யாருக்கு அதிகம். எப்படியிருந்தாலும் இது மாநில மற்றும் தேசிய அளவில் எதிர்க்கட்சியின் பலவீனத்துக்கு தாக்கம் அளிக்கும்” என்றார்.

PAS மற்றும் BERSATU தனியாக செயல்பட மாட்டார்கள் என்று டாக்டர் முகமட் அஜிசுடின் எதிர்பார்க்கிறார். நாட்டின் அரசியல் போக்கு பல்வேறு பின்னணி வாக்காளர்களின் ஆதரவைப் பெற பல கட்சிகளின் கூட்டணி தேவைப்படுகிறது.

PAS பாராளுமன்றத்தில் பெரிய புளோக்காக இருந்தாலும், அவர்களின் அரசியல் அணுகுமுறை மற்றும் இமேஜ் காரணமாக பல கட்சிகள் அவர்களை ஏற்க மாட்டார்கள் என்றார். “PAS பெரிய ப்ளாக் என்றாலும், அவர்களின் அரசியல் அணுகுமுறையை பல கட்சிகள் ஏற்க மாட்டார்கள். அதனால்தான் PAS அம்னோவை முவாஃபகாட் நேஷனல் (MN) -க்கு வற்புறுத்துகிறது.

ஆனால் இது கடினம் ஏனெனில் PAS அம்னோவை முதுகில் குத்தியுள்ளது.இந்த நெருக்கடியால், அம்னோ தங்கள் பழைய இருக்கைகளை மீண்டும் வெல்லலாம் என்று நான்  எதிர் பார்க்கிறேன்.

எனவே MN அஜெண்டா நடப்பது கடினம். PAS தனியாக செயல்பட்டால், அது அவர்களுக்கு சவாலாக இருக்கும்” என்றார். சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக (UIA) அரசியல் ஆய்வாளர் டாக்டர் சியாசா சுக்ரி கூறுகையில், PAS மற்றும் BERSATU வேறு வழியின்றி மீண்டும் நல்லுறவு ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக அடுத்த தேர்தல் விரைவில் நடந்தால்.எனினும், அந்த ஒத்துழைப்பு முன்பிருந்ததைப் போல் வலுவாக இருக்காது என்றார். இரு கட்சிகளும் இழந்த நம்பிக்கை காரணமாக அதிக எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் எடுக்கும்.

“PAS மீண்டும் BERSATU உடன் ஒத்துழைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் ஆனால் கட்டாயத்தில், பதற்றத்துடன். ஏனெனில் அவர்களின் பிரச்சினைகள்  சற்று  காலம்  நீடிக்கும், PN புதிய தலைவரைத் தேடலாம்.

ஆனால் அனைவராலும் ஏற்கப்படும் தலைவரைத் தேட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பிரச்சினை எழும். ஆனால் இது PAS-க்கு பெரிய பிரச்சினை அல்ல, PAS தனியாக செயல்படலாம்” என்றார். குறிப்பிடத்தக்கது, 15-வது பொதுத் தேர்தலில் (PRU-15) சிலாங்கூர் PN 22 சட்டமன்ற இருக்கைகளை வென்றது. இதில் BERSATU 12 தொகுதிகளும் PAS 10 இருக்கைகளும் வென்றன.

PN சிலாங்கூரின் வடக்குப் பகுதியில் கிராமப்புற மலாய் சமூகத்தின் ஆதரவை ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக சபாக் பெர்ணம், தஞ்சோங் காராங், சுங்கை பெசார் மற்றும்  உலு சிலாங்கூர் பகுதிகளில்  உள்ள சட்டமன்ற இருக்கைகள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.