ஷா ஆலம், டிச 23 — அடுத்தாண்டு முதல் அனைத்து உணவு வளாகங்களும் BMW (சுத்தமான, கவர்ச்சிகரமான மற்றும் மணம் கொண்ட) கழிப்பறை தரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) அறிவித்துள்ளது.
புதிய உரிம ஒப்புதல்கள் மற்றும் புதுப்பித்தல்கள் இரண்டிற்கும் இது ஒரு நிபந்தனையாக இருக்கும் என்று எம்பிஎஸ்ஏ கூறியது.
“பணியில் உள்ள அதிகாரிகளின் ஆய்வுகளின் போது கழிப்பறைகள் இந்த தரநிலைகளுடன் இணங்குவதும் மதிப்பிடப்படும். மேலும், வணிக உரிமங்களை அங்கீகரிப்பதில் அல்லது புதுப்பிப்பதில் இது ஒரு முக்கிய காரணியாக இருக்கும்” என்று எம்பிஎஸ்ஏ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிபத்தனையைப் பூர்த்தி செய்யத் தவறினால், வளாகங்களின் விண்ணப்பங்களை தாமதப்படுத்தலாம், நிராகரிக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் கீழ் அமலாக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் எம்பிஎஸ்ஏ எச்சரித்தது.
இந்த அமலாக்கம் குறிப்பிட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும். அனைத்து தொடர்புடைய தரப்பினரும் இதைப் பின்பற்ற வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு வணிக உரிமையாளர்கள் எம்பிஎஸ்ஏ பொது சுகாதாரம் மற்றும் கழிவு நிலைத்தன்மைத் துறையை 03-5510 5133 நீட்டிப்பு 1316/1547 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது sisapepejal@mbsa.gov.my என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.


