ஹரி ராயா ஐடில்ஃபித்ரியை முன்னிட்டு அபராதங்களுக்கு 65% வரை தள்ளுபடி – எம்பிஎஸ்ஏ

1 மார்ச் 2026, 3:05 AM
ஹரி ராயா ஐடில்ஃபித்ரியை முன்னிட்டு அபராதங்களுக்கு 65% வரை தள்ளுபடி – எம்பிஎஸ்ஏ

ஷா ஆலம், மார்ச் 1 - மார்ச் 1 முதல் 31 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட அபராதங்களுக்கு அதிகபட்சம் 65 சதவீதம் வரை தள்ளுபடியை ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) வழங்குகிறது.

இதன் மூலம் ஹரி ராயா ஐடில்ஃபித்ரியை முன்னிட்டு, மக்கள் தங்களது அபராதங்களை குறைந்த கட்டணத்தில் செலுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று எம்பிஎஸ்ஏ தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

“MBSA 2007 சாலை போக்குவரத்து (கார் நிறுத்துமிடம் வசதி) விதிகளின் கீழ் விதிக்கப்பட்ட அபராதங்களுக்குப், பிரச்சார காலம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, RM20 சிறப்பு கட்டணமும் வழங்கப்படுகிறது,” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷா ஆலம் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வத் தளங்கள் மூலம் அபராதங்களைச் சரிபார்த்து, செலுத்தலாம்.

அபராதங்கள் உள்ளவர்கள், இந்தப் பிரச்சாரம் மார்ச் 31 அன்று முடிவடைவதற்கு முன் அவற்றைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கூடுதல் தகவல்களுக்கு, எம்பிஎஸ்ஏ நிதித்துறையின் வருவாய் மேலாண்மை பிரிவை 03-5510 5133 (ext. 1521 / 1839 / 1203) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.