பெட்டாலிங் ஜெயா, டிச 18- மூன்று வாரங்களுக்கு முன்பு தெற்கு தாய்லாந்தைத் தாக்கிய பெரும் வெள்ளத்திலிருந்து இன்னும் மீளாத ஹட்யாய்க்கான பயணங்களை மலேசியர்கள் ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தெற்கு தாய்லாந்து நகரத்தில் சொத்து சேதம் RM1.3 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்திற்குப் பிறகு சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சோங்க்லாவில் உள்ள மலேசியாவின் துணைத் தூதர் அஹ்மட் ஃபஹ்மி அஹ்மட் சர்காவி தெரிவித்தார்.
பெரும்பாலான உணவு வளாகங்கள் மற்றும் சுற்றுலா மையங்கள் இன்னும் செயல்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், வணிக வளாகங்கள் தொடர்ந்து முடப்பட்டுள்ளன. ஹட்யாய் சுற்றுலா நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்பதையும் அவர் விளக்கினார்.
டிசம்பர் 20 வரை கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால், இந்த நிலைமை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.




