ஜாக்கர்த்தா , டிச 10 - செவ்வாய்க்கிழமை மாலை மத்திய ஜகார்த்தாவில் உள்ள டெர்ரா ட்ரோன் அலுவலகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
பிற்பகல் சமயம் கட்டடத்தின் முதல் மாடியில் தீ ஏற்பட்டது. தீ வேகமாக மேல் மாடிகளுக்கும் பரவியதால், பலர் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
மதியம் 12.43 மணிக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும்
100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இச்சம்பவத்தில் மூச்சுத் திணறி 20க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். உடல்கள் அனைத்தும் கிழக்கு ஜாகார்த்தாவில் உள்ள ஒரு காவல்துறை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
எனினும், இச்சம்பவம் தொடர்பான முழு விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் நடந்தபோது கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்ற தகவலை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.


