கோலாலம்பூர், டிச 10 - சபா மாநில அம்னோ தலைவராகவும் தேசிய முன்னணி தலைவராகவும் ஜஃப்ரி அரிஃப்ஃபின் நியமிக்கபட்டுள்ளார்.
காலஞ்சென்ற புங் மொக்தார் ரடின் அவர்களுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜஃப்ரி அரிஃப்ஃபின் சபா மாநிலத்தின் சுற்றுலா, கலை பண்பாட்டு, மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த தகவலை அம்னோ கட்சியின் தலைமை செயலாளர் அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்த்தார்.


