கோலாலம்பூர், டிச 10- புத்ராஜெயாவில் உள்ள கோத்தா மடாணி திட்டம், மற்றும் புக்கிட் ஜாலில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பண்டார் மடாணி திட்டங்கள் யாவும் சரியான தடத்தில் இருக்கிறது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கோலாலம்பூர், புத்ராஜெயாவில் உள்ள வீட்டுமனை நிர்மாணிப்பு திட்டங்களின் நிலை குறித்து கலந்துரையாடலின் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
புத்ராஜெயாவில் உள்ள பிரிசின்ட் 19இல் கோத்தா மடாணி வீட்டுடமை திட்டம் சுமார் 10 ஆயிரம் வீட்டுமனைகள் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, புக்கிட் ஜாலில் பண்டார் மடாணி திட்டதிலும் நவீனமய வீடுகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என்று அன்வார் சொன்னார்.


