கோலாலம்பூர், பிப் 25 – மலேசிய ஆயுதப் படைகளின் (ஏடிஎம்) அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்கு மடாணி அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும்.
வீரர்களின் குடும்ப நலனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வீட்டுவசதிப் பிரச்சனையும் இதில் அடங்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தற்காப்பு அமைச்சின் உயர் நிர்வாகம் மற்றும் ஏடிஎம் தலைவர்களுடன் விஸ்மா பெர்விராவில் நடைபெற்ற சந்திப்பின் போது தாம் இந்த விஷயத்தை வலியுறுத்தியதாக அன்வார் கூறினார்.
சந்திப்பின் போது, நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய முடிவுகள் குறித்து தமக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
"மேலும் சிக்கலான புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் ஏடிஎம்-மின் தயார்நிலை மற்றும் திறனை வலுப்படுத்துவதை உறுதிசெய்ய இந்த கலந்துரையாடல் மிகவும் முக்கியமானது," என்றார் அவர்.
"நாட்டின் முக்கிய தற்காப்பு அரணாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய இறையாண்மையின் சின்னமாகவும் ஏடிஎம் விளங்குகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இக்கூட்டத்தில், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் காலெட் நோர்டின், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மற்றும் ஆயுதப் படைகளின் தளபதி ஜெனரல் டத்தோ மாலெக் ரசாக் சுலைமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
மலேசிய ஆயுதப் படையினரின் நலனுக்கு மடாணி அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும்
25 பிப்ரவரி 2026, 1:05 AM
தொடர்புடைய செய்திகள்
national
ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் அடங்கிய நான்கு குற்றச்சாட்டுகள்- மலேசிய ஆயுதப்படையின் முன்னாள் தளபதி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
Mavitthran
23 ஜனவரி 2026

national
2026/2027 கல்வியாண்டின் UPUOnline வழி உயர்கல்வி நிலையங்களுக்கு ஜனவரி 29 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
Mavitthran
22 ஜனவரி 2026

national
தேசியப் பாதுகாப்பு தொழிற்துறை கொள்கை:வெளிப்படையான கொள்முதல் மற்றும் நல்லாட்சியை உறுதி செய்ய பிரதமர் அன்வார் உறுதி
Mavitthran
21 ஜனவரி 2026

national
ராணுவ உயர் அதிகாரிகள் மீதான ஊழல் விசாரணை: அரசு வழக்கறிஞரிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எம்.ஏ.சி.சி
Mavitthran
19 ஜனவரி 2026





