தோக்கியோ, டிச 9 - வடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனை விஸ்மா புத்ரா அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது.
தோக்கியோவில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் நிலைமையை கவனமாகக் கண்காணித்து வருவதாக விஸ்மா புத்ராகூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மலேசியர்கள் கவனமாக இருக்கவும், கடலோரப் பகுதிகளைத் தவிர்த்து, ஜப்பானிய அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் விஸ்மா புத்ரா அறிவுறுத்தியது.
உதவி உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தோக்கியோவில் உள்ள மலேசிய தூதரகத்தில் தங்கள் இருப்பிடத்தைப் பதிவு செய்ய மலேசியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
பெர்னாமா


