பேங்கோக், டிச 9- தென்கிழக்காசியா நாடுகள் பங்கேற்கும் சீ விளையாட்டு போட்டி இன்று தாய்லாந்து நாட்டில் அதிகாரப்பூர்வமாக தொடக்கம் காண்கிறது.
தாய்லாந்து சீ விளையாட்டு போட்டியின் உபசரணை நாடாக வலம் வருகிறது.
தாய்லாந்து- கம்போடியா எல்லை சிக்கல் காரணமாக இன்று நடைபெறும் சீ விளையாட்டு போட்டியின் தொடக்க விழா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
ராஜமங்களா தேசிய அரங்கில் நடைபெறும் சீ விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவை தாய்லாந்து நாட்டின் பேரரசர், பேரரசியார் இருவரும் தொடக்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சீ விளையாட்டு போட்டியில் தாய்லாந்து 2007ஆம் ஆண்டு உபசரணை அணியாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.


