ஷா ஆலம், டிச 8 — சிலாங்கூரில் கழிவுகளைப் புதிய எரிசக்தியாக மாற்றும் முயற்சியை கும்புலான் டாருல் எஹ்சான் பெர்ஹாட் நிறுவனத்தின் துணை நிறுவனம் KDEB கழிவு மேலாண்மை முன்னெடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கை கழிவுகளை சேகரிக்கும் தளங்களை (landfill) சார்ந்திருப்பதை குறைக்கும் தன்மை உடையது. இதன் மூலம் உள்ளூர்க் கழிவு மேலாண்மையை அந்நிறுவனம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள குப்பைக் குவிப்பு முறையை விட, இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு எளிதானது மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என அதன் மேலாண்மை இயக்குநர் டத்தோ ரம்லி முகமட் தாஹிர் கூறினார்.
“கழிவுகளை புதிய எரிசக்தியாக மாற்றும் முறை ஜப்பான், துருக்கி மற்றும் அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
“சிலாங்கூரில் நிலத்தின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. நாம் பாரம்பரிய முறையை தொடர்ந்தோம் என்றால் எதிர்காலத்தில் கழிவு மேலாண்மை செலவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, புதிய தொழில்நுட்பத்தை உடனடியாக ஏற்க வேண்டியது அவசியம்,” என்று அவர் கூறினார்.


