அகாம், டிச 8: கடந்த நவம்பர் 27 அன்று இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாநிலம், பலேம்பயான் பகுதியில் உள்ள செலாராஸ் ஆயர் திமோர் கிராமத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவத்தில், மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று உயிர் தப்பியது.
இருளான சூழ்நிலையில் பாதுகாப்பு பணியாளர்கள் மேற்கொண்ட அவசர மீட்புப் பணியின் போது, பாத்தான் என அடையாளம் காணப்பட்ட அக்குழந்தை ஒரு மரக்கிளையில் சிக்கிய நிலையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது.
ழந்தையின் பெற்றோர், பாட்டி, மாமா, அத்தை மற்றும் அண்ணன் உட்பட அக்குடும்பத்தில் உள்ள ஏழு பேரு இந்த பேரிடரில் உயிரிழந்துள்ளனர் என செலாராஸ் ஆயர் திமோர் கிராமத் தலைவன் அக்மட் ஃபௌஸி கூறினார்.
செலாராஸ் ஆற்றில் அருகில் இருந்த அக்குடும்பத்தின் வீடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக முற்றிலும் அழிந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்குழந்தை தற்போது உள்ளூர் சமூகத்தின் பராமரிப்பில் இருப்பதுடன், அதிகாரிகள் அக்குழந்தையின் தேவைகள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.


