தோக்யோ, டிச 5 - ஜப்பான் முழுவதிலும் பல இடங்களில் கரடி தாக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் மக்கள் அதிச்சிக்குள்ளாகியுள்ளனர். இதில் ஐந்து மூத்த குடிமக்கள் காயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு நாட்டில் கரடி தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்களை மேற்கோள் காட்டி சின்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
டோயாமா நகரில், விடியற்காலையில் செய்தித்தாள்களை விநியோகித்துக் கொண்டிருந்த 70 வயதுடைய ஒரு தம்பதியினர் கரடியால் தாக்கப்பட்டு முகத்தில் காயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதே போல் இவாட், நாகானோ, ஷிமானே ஆகிய வட்டாரங்களிலும் இதுபோன்று கரடி தாக்குதல்கள் நடத்துள்ளதாகப் பதிவாகியுள்ளன.
ஏப்ரல் மாதத்திலிருந்து, மனிதர்களுக்கும் கரடிகளுக்குமிடையே நடந்த மோதல்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் குறைந்தது 22 வட்டாரங்களில் கரடி தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 13 மரணங்கள் உட்பட மொத்தம் 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


