கோத்தா கினாபாலு, டிச 5- சபா மாநில அம்னோ, மற்றும் தேசிய முன்னணி தலைவரான டத்தோஶ்ரீ புங் மொக்தார் ரடின் இன்று காலையில் காலமானார்.
அவரின் மறைவுக்கு சபா மாநில ஆளுநர் துன் மூசா அமான் அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.
துன் மூசா இன்று தனது Facebook பதிவில், புங் மொக்தார் அவர்கள் தனது வாழ்நாளில், குறிப்பாக துணை முதலமைச்சர் மற்றும் கினபாத்தங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பாத்திரங்களின் மூலம் சபாவிற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார் என்று குறிப்பிட்டார்.
"நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் மூலம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பல சேவைகளைச் செய்துள்ளார். அவர் செய்த அனைத்துச் சேவைகளும் சபாவின் அனைத்துத் தரப்பு மக்களால் என்றும் நினைவுகூரப்படும்," என்று துன் மூசா கூறினார்.
இந்தப் பழம்பெரும் அரசியல்வாதியின் இழப்பு, அவரது பங்களிப்புகளையும் பொதுச் சேவையின் மூலம் அவர் செய்த தியாகங்களையும் மதிக்கும் அனைவருக்கும் ஒரு பேரிழப்பாகும் என்று துன் மூசா தெரிவித்தார்.
துன் மூசா அவர்கள், இன்று அதிகாலை 11.40 மணியளவில் கோத்தா கினபாலுவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்த புங் மொக்தார் அவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அங்கு சபா சுற்றுலா, கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோ ஜாஃபெரி அரிஃபின் அவரை வரவேற்றார்


