தாய்லாந்து 2025 சீ விளையாட்டுப் போட்டியில் அரையிறுதிக்கு தேசிய போலோ அணி முன்னேறியது

5 டிசம்பர் 2025, 4:29 AM
தாய்லாந்து 2025 சீ விளையாட்டுப் போட்டியில் அரையிறுதிக்கு தேசிய போலோ அணி முன்னேறியது
தாய்லாந்து 2025 சீ விளையாட்டுப் போட்டியில் அரையிறுதிக்கு தேசிய போலோ அணி முன்னேறியது

பேங்காக் , 5 டிசம்பர்: தாய்லாந்து 2025 சீ விளையாட்டுப் போட்டிகளில் போலோ குதிரையேற்ற போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியது மூலம் தேசிய போலோ அணி சிறந்த ஓட்டத்தைத் தொடர்ந்தது. நேற்று, சமுத் பிரகானில் உள்ள VS ஸ்போர்ட்ஸ் கிளப் & சியாம் போலோ பூங்காவில் நடந்த கடுமையான போட்டியில் புரூணையை 6-5 என்ற கணக்கில் தோற்கடித்தது.

பகாங் இளவரசர் தெங்கு முகமது இஸ்கந்தர் ரியாத்துதீன் ஷா தலைமையிலான தேசிய அணி சிறப்பாக விளையாடி வெற்றியைப் பெற்றது.  நேற்று நடைபெற்ற போட்டியில் தாய்லாந்திடம் 7-7.5 என்ற கணக்கில் தோல்வி அடைந்த புரூணை அணி, உயர் மனப்பான்மையை வெளிப் படுத்தியதாகவும், இரு அணிகளும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் அணியின் மேலாளர் டத்தோ ஷைபுல் அனுவார் அகமது ஷாஃபி தெரிவித்தார்.

“எங்கள் வீரர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடினார்கள். போட்டி 5-5 என சமநிலையில் இருந்த போது, இறுதி மூன்று நிமிடங்களில் நாங்கள் வெற்றி கோலைப் பெற்றோம்,” என அவர் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வீரர்கள் அடுத்த மூன்று நாட்கள் ஓய்வில் இருப்பார்கள், பின்னர் வரும் திங்கட்கிழமை நடைபெறும் அரையிறுதி சுற்றில் மீண்டும் களமிறங்க உள்ளனர்.

மேலும் மலேசியாவின் அரையிறுதி எதிரணி, இன்று நடைபெறும் பிலிப்பீன்ஸ் மற்றும் தாய்லாந்து அணிகளின் மோதலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார். தாய்லாந்து தென்கிழக்காசியா விளையாட்டுப் போட்டி 2025,  9 முதல் 20 டிசம்பர் வரை பேங்காக் மற்றும் சோன்புரி என இரு பகுதிகளில் நடைபெறவுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.