ஷா ஆலம், டிச 4: அடுத்த ஆண்டுக்கான வணிக உரிம புதுப்பிப்பின் விண்ணப்பம் நவம்பர் 3 முதல் டிசம்பர் 31 வரை திறந்திருக்கும் என கோலா லங்காட் நகராண்மை கழகம் (எம்பிகேல்) தெரிவித்துள்ளது.
எம்பிகேஎல் அலுவலக லொபியில் அல்லது நடமாடும் கவுண்டரில் வணிகர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அலுவலக கவுண்டர் திங்கள்–வெள்ளி காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும் மற்றும் நடமாடும் கவுண்டர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும்.
விண்ணப்பதாரர்கள் 2025ஆம் ஆண்டின் உரிமத்தை கொண்டு வரும்படி எம்பிகேல் பரிந்துரைத்துள்ளது. மேலும், உரிமை வகைக்கேற்ப விதிமுறைகளை முன்பே சரிபார்க்குமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
``Serta Merta`` வகை உரிமம் உடையவர்கள் புதுப்பிப்பை வேகப்படுத்த ehasil.mpkl.gov.my இணையப் போர்டலை நாடலாம்.
நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் உரிமத்தைப் புதுப்பிக்க தவறினால் சட்ட நடவடிக்கை மற்றும் அபராதத்திற்கு வழிவகுக்கும் என்று நகராண்மை கழகம் எச்சரித்துள்ளது.
வணிகர்கள் கடைசி நேரம் வரை காத்திருப்பதைத் தவிர்க்கும் படியும் கவுண்டரில் கூட்டம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு 03-38530317 தொலைபேசி எண்ணை அல்லது 012-300 4167 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை தொடர்பு கொள்ளவும்.


