ஷா ஆலாம், டிச 4: ஊராட்சி மன்றங்கள் வசூலிக்கும் (cukai pintu) சேவை வரி, வருவாயில் சுமார் 90 சதவீதம் திடக்கழிவு மேலாண்மைக்காகப் பயன்படுத்தப்படுகின்றது என்று மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த தொகை சிலாங்கூரில் தினமும் சுமார் 7,000 டன் கழிவுகளை சேகரித்து அகற்றுவதற்குப் பயன்படுகின்றது என அவர் தெரிவித்தார்.
“மாநிலத்தின் உள்ள பெரும்பாலான ஊராட்சி மன்றங்கள் தங்களது வருவாயின் 90 சதவீதத்தை திடக்கழிவு மேலாண்மைக்காக செலவிடுகின்றனர். சிலாங்கூரில் ஒரு நாளைக்கு 7,000 டன் என மிக அதிகமான திடக்கழிவு உற்பத்தி பதிவாகியுள்ளது. அனைத்து கழிவுகளும் ஜெராம் மற்றும் புக்கிட் தாகர் போன்ற பல மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.`` என மந்திரி புசார் கூறினார்.
மேலும், வணிக அனுமதிகள் மற்றும் விளம்பர பலகைகளின் வாடகை போன்ற வருவாயே மாநிலத்திற்கு சிறிய அளவில் கிடைக்கின்றது என்றார்.
மாநில அரசு ஜெராம் மற்றும் கோலா லங்காட் மாவட்டத்திலுள்ள தஞ்சோங் 12 பகுதியில் திடக்கழிவு ஆற்றலாக்கும் (Waste-to-Energy – WTE) ஆலை திட்டத்தை செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
“இந்தத் திட்டம் 2027 அல்லது 2028க்குள் முடிவடைந்தால், திடக்கழிவு மேலாண்மை திறனை பெரிதும் மேம்படுத்தும். இப்போது 7,000 டன் இருக்கும் அளவு, மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் 7,500 டனாகவும் அதிகரிக்கலாம்.
“எனினும், சமூகத்தில் மறுசுழற்சி பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும், ஏனெனில், அது திடக்கழிவு அளவை குறைக்கும். உண்மையில், அந்த நிலையை அடைவதற்காக இன்னும் நீண்ட தூரம் உள்ளது,” என்றும் அமிருடின்



