பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் காலமானார்

4 டிசம்பர் 2025, 3:11 AM
பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் காலமானார்

சென்னை, டிச 4- பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும் ஏ.வி.எம் ஸ்டூடியோவின் நிறுவனர்களில் ஒருவரான ஏ.வி.எம் சரவணன் அவர்கள் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86 ஆகும்.

சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் தயாரிப்பாளர் சரவணன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் ஏ.வி.எம் சரவணன்.

ஏவிஎம் ஸ்டூடியோவை நிர்வகித்து அவர் பல திரைப்படங்களைத் தயாரித்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் இன்று அவர் காலமான செய்தி பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.