கோலாலம்பூர், டிச 2 - நாட்டில் தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்திற்கான (பிடிபிடிஎன்) கடன் நிலுவை தொகை, கடந்த 31 அக்டோபர் நிலவரப்படி 1.2 மில்லியன் கடனாளர்களுடன், தற்போது RM11 பில்லியனை கடந்துள்ளது.
இதில் STR உதைவித் தொகையைப் பெறும் குறைந்த வருமானம் கொண்ட 967,796 மாணவர்களின் பிடிபிடிஎன் கடன் தொகை 10.23 பில்லியன் ரிங்கிட்டாகப் பதிவாகியுள்ளது. அதே வேளை மாதம் 8,000 ரிங்கிட்டுக்கும் மேல் வருமானம் பெரும் 64,618 மாணவர்கள் சுமார் 257.56 மில்லியன் ரிங்கிட் பிடிபிடிஎன் கடனைத் திரும்பச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 8,000 ரிங்கிட்டுக்கும் குறைந்த வருமானம் மற்றும் STR (Sumbangan Tunai Rahmah) உதவித் தொகையைப் பெறாத 196,115 மாணவர்கள் 539.35 மில்லியன் ரிங்கிட் கடனைச் செலுத்தாமல் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் STR உதவியைப் பெற்ற 450,522 மாணவர்கள் 4.17 பில்லியன் ரிங்கிட்டையும், STR உதவியைப் பெறாதக் குறைந்த வருமானத்தைப் பெற்று வரும் 131,396 மாணவர்கள் 697.79 மில்லியன் ரிங்கிட் கடனையும் மற்றும் உயர்ந்த வருமானம் பெரும் 35,324 மாணவர்கள் 362.36 மில்லியன் ரிங்கிட் கடனையும் பிடிபிடிஎன் நிறுவனத்திற்குத் திரும்ப செலுத்தியுள்ளனர்.
தற்போது பிடிபிடிஎன் கடன் பூரண விலக்கு அரசு பல்கலைக்கழக (IPTA) மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் தனியார் பல்கலைக்கழக (IPTS) மாணவர்ளுக்கு வழங்கப்படுவதைப் பற்றி தேசிய உயர்கல்வி நிதிக் கழகம் மீண்டும் பரிசீலித்து வருகின்றது


