கோத்தா பாரு, 26 நவம்பர்: இன்று அதிகாலை, தானா மேரா மாவட்டத்தின் கம்போங் பத்து 5, ஜாலான் ஜேடோக் பகுதியில் வேகமான நீரோட்டத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற இரண்டு பெண்களில் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொரு பெண் உயிருடன் மீட்கப்பட்டார்.
அதிகாலை 4.13 மணியளவில் வாகனம் பலமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அவசர அழைப்பு வந்தது.
மூன்று நிமிடத்தில் மீட்புக்குழு சம்பவ இடத்துக்கு வந்தது. உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. முதலாவதாக சாமிலா சுஸி அக்மத் பஷாருத்தீன் மீட்கப்பட்டார்.
இன்றுக் காலை 7.49 மணிக்கு, இரண்டாவது பெண் கார் சிக்கியிருந்த இடத்திலிருந்து அருகில் கண்டெடுக்கப்பட்டார்; பின்னர் அவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது எனத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார். பின்னர், மரணமடைந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.


