ஷா ஆலம், நவ 26 : நாளை சுபாங் பெஸ்தாரி பெட்ரோனாஸ் நிலையத்தில் முதல் 300 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு RM10 மதிப்பிலான இலவச பெட்ரோல் பெறும் வாய்ப்பு வழங்கப்படும்.
ஷா ஆலம் மாநகராட்சியின் (எம்பிஎஸ்ஏ) சமூக மேம்பாட்டு துறை நடத்தும் இந்த நிகழ்வு, அந்த உள்ளூராட்சி அமைப்பின் 25ஆவது வெள்ளி விழாவை முன்னிட்டு காலை 11 மணிக்கு தொடங்கும்.
இந்த திட்டம், உணவு விநியோகிப்பவர்கள், அரசு ஊழியர்கள், தொழிற்துறை பணியாளர்கள் மற்றும் சுற்றுப்புற உயர்கல்வி நிலைய மாணவர்கள் ஆகிய குழுக்களை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு மூன்றாவது தொடராக நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர், முதல் தொடர் ஜூன் மாதத்திலும் அக்டோபரில் இரண்டாவது முறையாகவும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.




