கோலாலம்பூர் நவ 25: வெள்ளத்தால் சூழப்படும் அபாயகரமான பகுதிகளில் வசிப்பவர்களை விழிப்புடன் இருக்க, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை நினைவூட்டினார்.ஆப்பிரிக்கக் கண்டத்தில் மூன்று நாடுகள் சுற்றுப்பயணமாக பிரதமர் தற்போது கென்யாவில் உள்ளார்.
இந்நிலையில் ஏழு மாநிலங்களைப் பாதித்து, தற்போது 15,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள வெள்ள நிலைமை மோசமடைந்து வருவது குறித்து கவலை தெரிவித்தார்.
ஆபத்தில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.
குறிப்பாக உடனடியாக வெளியேறும்படி கேட்கப்படும்போது, குடும்பப் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கருதவும் பிரதமர் நினைவூட்டினார்.
மேலும் நட்மா தொடர்புடைய அனைத்து நிறுவன சொத்துக்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முழுமையாகத் திரட்டப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடி நிவாரண உதவி சென்றடைவதை உறுதி செய்கிறது என்று பிரதமர் கூறினார்.




