ஷா ஆலம், நவம்பர் 22 - ஒரு காலத்தில் எதிர்க்கப்பட்டது ஆனால் இப்போது கழிவு மேலாண்மை தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேஸ்ட்-டு-எனர்ஜி (WTE) தொழில் நுட்பத்தைப் போலவே, அணுசக்திக்கு எதிரான அதன் களங்கத்தை சமூகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மந்திரி புசார் ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.கைரி ஜமாலுடின் மற்றும் ஷாஹ்ரில் ஹம்டான் ஆகியோருடன் கெலுவார் செகேஜாப் புரோட்காஸ்டில், அமிருடின் அணுசக்தி ஒரு தூய்மையான எரிசக்தி , மேலும் நாடு எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் போது இது ஒரு விருப்பமாக மாற்று தீர்வாகலாம் என்றார்."ஒரு காலத்தில், பலர் கழிவிலிருந்து ஆற்றலுக்கு மாறுவதை எதிர்த்தனர், ஆனால் இப்போது மக்கள் கழிவிலிருந்து ஆற்றலுக்கு ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்வதைப்போன்று,. அணுசக்தியும் அதே திசையில் செல்கிறது என்று நான் நம்புகிறேன், "என்று அவர் கூறினார். சிலாங்கூரின் அர்ப்பணிப்பு ஐந்து ஆண்டுகளில் ஒரு அணுசக்தி நிலையத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது அல்ல, ஆனால் அந்த நேரத்தில் இந்தத் துறைக்கு ஒரு அடித்தளத்தை தயாரிப்பதாகும்."ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நாம் தொடங்குவதற்கு முன் ஐந்து ஆண்டுகள் ஆயத்த காலத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம் என்றார்.. அதனால்தான் நாங்கள் மாணவர்களை சின்குவா (பல்கலைக்கழகம்) க்கு அனுப்புகிறோம், அங்கு அவர்களின் வாழ்க்கைச் செலவுகளுக்காக RM 1 மில்லியன் படுத்துகிறோம், "என்று அவர் விளக்கினார்.பல நாடுகளைப் போலவே கடலில் வைக்கப்பட்டுள்ள சிறிய உலைகளின் திறன் உட்பட அணுசக்தி நிலையத்தின் பாதுகாப்பு குறித்தும் அமிருடின் பேசினார்."வழக்கமாக, அணுசக்தி கட்டுமானங்கள் கடலுக்கு அருகில் கட்டப்படுகின்றன, ஆனால் நிலத்திலிருந்தும் மனிதர்களிடமிருந்தும் வெகு தொலைவில், கடலில் மேலும் மாடுலர் (கட்டுமானங்கள்) பயன்படுத்தும் நாடுகள் உள்ளன. ஒருவேளை அதைத் தான் நாமும் செய்வோம்."நிச்சயமாக, ஐரோப்பாவில் எங்கள் தேவைக்கான இசைவாக பிரான்ஸ் இருக்கலாம், ஆனால் சிறந்த உற்பத்தியாளராக சீனா விளங்குவதாக நான் நினைக்கிறேன்", என்று அவர் கூறினார்.கிள்ளான் பள்ளத்தாக்கின் எரிசக்தி தேவைகள் குறிப்பிடத்தக்கவை என்பதால் சிலாங்கூர் முன்கூட்டியே ஆயத்தங்களைச் செய்ய வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்."பகுப்பாய்வின்படி, மலேசியா முழுவதும் பயன்படுத்தப்படும் ஆற்றலில் 47 சதவீதம் கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து வருகிறது. நிலையான எரிசக்தியுடன் நாம் தயாராக இல்லை என்றால், இது எதிர்காலத்தில் அது ஒரு பெரிய சவாலாகும் "என்று அவர் மேலும் கூறினார்.அணுசக்தி பிரச்சினைகளில் அரசியல் அழுத்தத்தை எதிர் கொள்ளத் தயாரா என்று கேட்டதற்கு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சமூக கண்ணோட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும், தற்போதுள்ள விருப்பங்களை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அமிருடின் கூறினார்.
அணுசக்தியை அழிவு என ஒதுக்குமுன் அதன் ஆக்கத்தையும் கருத்தில் கொள்ள அமிருடின் வலியுறுத்து
23 நவம்பர் 2025, 6:47 AM




