தவாவ், நவ 21- சபா மாநில பொருளாதாரத்தை நிலைநிறுத்த சபா மாநில ஜசெக முதன்மையாக கொள்ளும் என்று சபா மாநில ஜசெக தலைவர் பூங் ஜின் செ கூறினார்.
17 ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தலில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது எங்களின் இலக்காகும்.
இதுவே சபா மாநில மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகும் என்று பூங் ஜின் செ தெரிவித்தார்.
சபா மாநிலத்தில் பொருளாதாரம் வலுப்பெற்றால் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு சபா மக்களுக்குப் பெரும் பயனாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
லிகாஸ் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் பூங் ஜின் செ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
17 ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநில தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பு நவம்பர் 25 ஆம் தேதி நடைபெறும் என்று மலேசியத் தேர்தல் ஆணையம் இதற்கு முன் தெரிவித்தது.
சபா மாநில பொருளாதாரத்தை நிலைநிறுத்த சபா ஜசெக முக்கியத்துவம் அளிக்கும் கொள்ளும்- பூங் ஜின் செ தகவல்
21 நவம்பர் 2025, 7:42 AM




