ப்ரிடொரியா, நவ 21- ஜி 20 உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தென்னாப்பிரிக்காவுக்கு வந்தடைந்தார். மலேசிய நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.38 மணிக்கு அன்வார் அந்நாட்டை சென்றடைந்தார்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரை தென்னாப்பிரிக்காவுக்கான மலேசிய தூதர் டத்தோ யுபஸ்லான் யூசோஃப், தற்காப்பு அமைச்சின் துணையமைச்சர், தென்னாப்பிரிக்காவின் மூத்த இராணுவ அதிகாரிகளும் பிரதமரையும் மலேசிய பேராளர்களையும் வரவேற்றனர்.
நவம்பர் 20 முதல் 23ஆம் தேதி வரை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் அரசுமுறை பயணமாக தென்னாப்பிரிக்கா நாட்டில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியாவிற்கு இந்த ஜி 20 உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜி 20 மாநாடு இந்த முறை தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது. சமத்துவம், ஒற்றுமை மற்றும் அனைவருக்குமான உறுதி தன்மை ஆகிய கோட்பாடுகளை முன்னிறுத்தி இந்த ஜி 20 மாநாடு நடைபெறுகிறது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தென்னாப்பிரிக்கா நாட்டு தலைவர்களுடனும் சந்திப்பு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி 20 உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள தென்னாப்பிரிக்காவுக்கு வந்தடைந்தார் பிரதமர் அன்வார்
21 நவம்பர் 2025, 3:38 AM




