பெட்டாலிங் ஜெயா, நவ 20- இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியே இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 17 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று பிரிக்பீல்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஹோ சாங் ஹூக் கூறினார்.
பாதிக்கப்பட்ட இருவரும் பலத்த காயங்களுக்கு இலக்காகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனது முன்னாள் காதலி வோறொரு ஆண் காதலனுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்ததை பார்த்து பொறாமை கொண்ட காரணத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட இருவரும் அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் சொன்னார்.
போலீஸ் விசாரணைகளுக்கு உதவ இன்னும் சில சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது. இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்ஷன் 326 மற்றும் 148யின் கீழ் விசாரிக்கப்படுகிறது.




