ad

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கே.எல். மொனொரெல் இலகு ரயில் சேவையில் பாதிப்பு

20 நவம்பர் 2025, 4:31 AM
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கே.எல். மொனொரெல் இலகு ரயில் சேவையில் பாதிப்பு

கோலாலம்பூர், நவ 20- கோலாலம்பூர் மோனோரயில் சேவை மேடான் துவாங்கு (Medan Tuanku) மற்றும் சௌ கிட் (Chow Kit) நிலையங்களுக்கு இடையே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு ரயில் தண்டவாளத்தில் நின்றுவிட்டதால், தாமதத்தை எதிர்கொண்டது.

ரேபிட் ரயில் எஸ்.டி.என். பி.எச்.டி (Rapid Rail Sdn Bhd) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரயிலில் இருந்த போக்குவரத்து அதிகாரிகள் பயணிகளைப் பாதுகாப்பாக அருகில் உள்ள நிலையங்களுக்கு மாற்றியுள்ளனர்.

இதையடுத்து, கே.எல் சென்ட்ரல் (KL Sentral) மற்றும் ஹாங் துவா (Hang Tuah) நிலையங்களுக்கு இடையேயும், அத்துடன் ஹாங் துவா மற்றும் புக்கிட் நானாஸ் (Bukit Nanas) நிலையங்களுக்கு இடையேயும் மாற்று ஊதிய ரயில் சேவை செயல்படுத்தப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

தித்திவாங்சா (Titiwangsa) மற்றும் புக்கிட் நானாஸ் நிலையங்களுக்கு இடையில் மாற்றுப் பேருந்து சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டு, இயல்பான சேவையை கூடிய விரைவில் மீண்டும் தொடங்குவதற்காகப் பொறியியல் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன.

மேலதிக தகவல்கள் மற்றும் சேவை நிலவரத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் காணப் பயணிகள் ரேபிட் கே.எல்-லின் (Rapid KL) சமூக வலைத்தளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.