ஷா ஆலம், நவ 19 - ஆட்டிசம் கொண்ட குழந்தைகளுக்கு மேலும் நட்பான மற்றும் வசதியான சூழலை உருவாக்கும் வகையில், ஊராட்சி மன்றங்கள் (PBT) பயன்படுத்தக்கூடிய சிறப்பு வழிகாட்டுதல் (guideline) ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்று பலாகோங் தொகுதி மாநில சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரைத்துள்ளார்.
இந்த பரிந்துரை சிலாங்கூர் சமூக நலத் துறையின் (JKM) தரவுகளின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது. அந்தத் தரவுகளின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள மொத்த மாற்றுத்திறனாளிகளின் (OKU) எண்ணிக்கையில் 32.5 சதவீதம் அதாவது 17,794 ஆட்டிசம் கொண்ட நபர்கள் உள்ளனர் என ஒங் சுன் வேய் தெரிவித்தார்.
“இது சிறிய எண் அல்ல, தீவிரமான கவனத்தைப் பெற வேண்டிய நிலையில் உள்ளது. பல பொதுவசதிகள் அவர்களின் தேவைகளைக் கவனத்தில் கொள்ளாமல் அமைக்கப்பட்டுள்ளன,`` என்றார்.
“ஆகையால் ‘சிறப்பு தேவைகளுக்கு ஏற்ப பொது வசதிகளை நட்பாக மாற்றும் வழிகாட்டுதல்களை’ (Special Needs-Friendly Public Spaces) வடிவமைக்க மாநில அரசு முன்வர வேண்டும் என்று பரிந்துரைக்கபப்டுகிறது.
இது ஊராட்சி மன்றங்கள் மற்றும் பொதுவசதி நிர்வாகிகள் அனைவரும் பின்பற்றக்கூடிய ஒரு அடிப்படை வழிகாட்டுதலாக இருக்கும். இதன் மூலம் சிலாங்கூர் அனைத்தையும் உள்ளடக்கிய மாநிலமாக உருவாக்க முடியும்,” என அவர் கூறினார்.
நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்ற (DNS) அமர்வில் 2026 நிதியுதவி மசோதாவைப் பற்றிய விவாதத்தின் போது இதனை ஒங் தெரிவித்தார்.
வழிகாட்டுதல்கள் மட்டுமில்லாமல், சில பள்ளிகளில் சிறப்பு கல்வி அறைகளை மேம்படுத்த அல்லது புதியதாக அமைக்க மாநில அரசு தனிப்பட்ட நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
“இதன் மூலம், ஆட்டிசம் கொண்ட குழந்தைகளின் கல்வி தேவைகளில் காணப்படும் குறைபாட்டை நிவர்த்தி செய்வதில் சிலாங்கூர் தன் பங்கை ஆற்ற முடியும்.




