ஷா ஆலாம், நவ 19- சிலாங்கூர் மாநிலத்தில் பல்லின மக்கள் ஒற்றுமையாகவும் சுபிட்சத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.
இதன் காரணமாக அவரவர்களின் பெருநாள்கள் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர்களுக்கான பெருநாள் கொண்டாட்டத்திற்காக மாநில அரசு, 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 1.5 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
சிலாங்கூர் மாநில அரசின் இந்த நடவடிக்கையானது சிலாங்கூர் அரசு இந்தியர்கள் மீது அதீது மதிப்பும் அன்பும் கொண்டிருப்பதைப் புலப்படுத்துவதாக சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் கூறினார்.
இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளி, பொங்கல், வைஷாக்கி, உகாதி, ஆகிய பெருநாள்களுக்கு மாநில அரசு இந்த நிதியை ஒதுக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.




