ஷா ஆலாம், நவம்பர் 19- வறுமை ஒழிப்பு ப்ளூ பிரிண்ட் உதவி மற்றும் i-SEED முயற்சியின் கீழ் இந்திய தொழில் முனைவோர் உதவி போன்ற திட்டங்களை தொடர்வதோடு, தொழில் திறன், மற்றும் சந்தை விரிவாக்கத்தை அதிகரிக்கும் வகையில் விரிவான மற்றும் பெரிய அளவிலான புதிய திட்டத்தையும் உருவாக்கி வருகிறது.
இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாநில அரசு 2025-ஆம் ஆண்டு கார்னிவல் ப்ளூ பிரிண்ட் & i-SEED நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த கார்னிவல் 22 நவம்பர் 2025 (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கோல லாங்காட்டின் பந்தாய் மோரிப் திடலில் நடைபெற உள்ளது. இதில் ப்ளூ பிரிண்ட் மற்றும் i-SEED தொழில் முனைவோர் கண்காட்சி-விற்பனை, அரசு மற்றும் தனியார் நிறுவன கண்காட்சி, TEKUN, HIJRAH Selangor, MARA, SME Corp, SIC போன்றவற்றின் சொற்பொழிவுகள், PLATS மற்றும் SME Corp வழியாக தொழில்நுட்ப முயற்சிகள், குடும்ப நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கு விளையாட்டு, மற்றும் சமையல் போட்டிகள், இலவச சுகாதார பரிசோதனை, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளதாக சிலாங்கூர் மாநில மனித வளம், மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
2008 முதல் 2024 வரை வறுமை ஒழிப்பு ப்ளூ பிரிண்ட் முயற்சியின் மூலம் 5,981 பேர், மற்றும் 2021 முதல் i-SEED வழியாக 567 இந்திய தொழில் முனைவோர் உதவி பெற்றுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறந்த தொழில் முனைவோருக்கு ப்ளூ பிரிண்ட் மற்றும் iSEED ஐகான் விருதுகளும் வழங்கப்படும். இந்தக் கார்னிவல் 10,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் எனவும், 300 பங்கேற்பாளர்கள், அதில் 40 உதவி பெற்ற தொழில் முனைவோர் தங்கள் வியாபாரத்தை அமைக்க உள்ளனர்.
இதற்கு மாவட்ட அலுவலகம், உள்ளூராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு முகவர்கள் இணைந்து செயல்படுகின்றனர். இந்தக் கார்னிவல் சிறு தொழில் முனைவோரின் வருமானத்தை உயர்த்தி, சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தி, நீண்ட கால வியாபார வளர்ச்சிக்கு விநியோகஸ்தர்கள் மற்றும் கொள்முதல் சங்கங்களுடன் இணைப்பை வலுப்படுத்தும். இது இளைஞர்களுக்கு தொழில் முனைவை நிலையான மற்றும் வளர்ச்சியடைந்த தொழிலாக பார்க்கும் ஊக்கம் அளிக்கும். மொத்தத்தில், இந்தக் கார்னிவல் மாநில அரசின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிபலிக்கிறது




