கோலாலம்பூர், நவ 19 — நாளை பிற்பகல் 1 மணி வரை இடியுடன் கூடிய கனமழை நீடிக்கும் என்ற எச்சரிக்கையை மூன்று மாநிலங்களுக்கு மலேசிய வானிலைத் துறை வெளியிட்டுள்ளது.
அதில் சிலாங்கூரில் உள்ள சபாக் பெர்ணம் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
மேலும், பேராக் மற்றும் சபா மாநிலத்தில் உள்ள சில பகுதிகளிலும் இதே வானிலைதான் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.




