குவாந்தான். நவ 19- பகாங் மாநிலத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வரவிருக்கும் மழைக்காலம் மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்ள பகாங் மாநில அரசாங்கம் தயாராக உள்ளதாக பகாங் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் கூறினார்.
வெள்ளப்பேரிடர்களைத் தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேவேளையில் மாநில பேரிடர் நிர்வாக செயற்குழு தயாராக இருக்கும்படியும் தாம் உத்தரவிட்டுள்ளதாக வான் ரொஸ்டி விவரித்தார்.
வெள்ளம் ஏற்பட்டால் பகாங் மாநில மக்கள் மாநில அரசின் தற்காலிக வெள்ள தடுப்பு மையத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
முன்னதாக, வெள்ளத்தை எதிர்கொள்ள பகாங் மாநில மக்கள் தயாராக இருக்கும்படி பகாங் மாநில ஆட்சியாளர், அல்- சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்- முஸ்தபா பில்லா ஷா கேட்டுக்கொண்டார்.




