கிள்ளான், நவ 18: கிள்ளான் மாவட்டத்தில் டிங்கி தடுப்பு நடவடிக்கைகள் நல்ல முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. 45வது நோய்த்தொற்று வாரத்தில் மொத்த 3,659 டிங்கி சம்பவங்கள் மட்டுமே பதிவாகிய நிலையில் கடந்த ஆண்டு அதே காலக்கட்டத்தில் 7,462 சம்பவங்கள் பதிவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்த மரணங்களின் எண்ணிக்கை இரண்டு மட்டுமே ஆகும்.
இந்த நடவடிக்கைகளில் மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குவா பெர்ங் ஃபெய், மாநகர் மன்ற உறுப்பினர் ஙாகியான் யோக் மோய் மற்றும் COB இயக்குநர் எஸ்.ஆர். அம்ரான் அப்துல்லா ஹாடி பங்கேற்றனர்.
சமூகத்துடன் இணைந்து நடத்தப்படும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் களப்பணிகள் விளைவாக, நோய்த்தொற்று எண்ணிக்கையில் இத்தகைய சரிவு ஏற்பட்டுள்ளது என எம்பிடிகே சுகாதார இயக்குநர் அஸ்மி முஜி கூறினார்.
பொதுமக்களை வாரத்திற்கு ஒரு முறை வீட்டை சுத்தம் செய்யவும், நீர் தேக்கங்களை அகற்றவும், ஏடிஸ் பரவலைத் தடுப்பதை உறுதிப்படுத்துமாறும் எம்பிடிகே அறிவுறுத்தியுள்ளது.




