ஷா ஆலாம், நவ 18- சிலாங்கூர் மாநிலத்தின் பௌத்தம், கிறிஸ்தவம், இந்து, சீக்கியம் மற்றும் தாவோ மதம் ஆகியவற்றுக்கான சிறப்புச் செயற்குழுவான LIMAS-இன் நிதியானது, மத நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், RM6 மில்லியனிலிருந்து RM8 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது என்று சிலாங்கூர் மாநில மனிதவளம், மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் கூறினார்.
கோல சிலாங்கூரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரு தகன மேடையை அமைப்பதற்கான மாநில அரசின் உறுதிப்பாட்டையும் தொடரவுள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்த நிலையில் இது மாநில அரசின் முயற்சிகளில் ஒன்றாகும் என்று வர்ணித்தார்.
மேலும், பழுதடைந்த இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைப் புனரமைத்தல் மற்றும் மறுசீரமைப்பதற்கான விண்ணப்பங்களை ஈடுசெய்யவும், மதங்களுக்கு இடையேயான கல்வி மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்களை மேற்கொள்ளவும், உள்ளடக்கிய சமூக நடவடிக்கைகள் மூலம் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் LIMAS நிதி மீளாய்வு செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது," என்று கூறினார்.




