ஷா ஆலாம், நவ 18- சிலாங்கூர் மாநிலத்தில் வேலை வாய்ப்பினை உருவாக்கவும் மனிதவளத்தை மேலோங்க செய்யவும் மாநில ரீதியில் வேலை வாய்ப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது.
இந்த தகவலைச் சிலாங்கூர் மாநில மனிதவளம், மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தின் சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர் தொடங்கி சிப்பாங் வரையில் மாநில அளவில் வேலை வாய்ப்பு கண்காட்சிகளை நடத்தியுள்ளோம்.
இதனால் கல்வி கற்ற இளைஞர்கள் தங்களுக்குப் பிடித்த துறையில் தங்களின் பணிகளைத் தொடங்க ஏதுவாக இருக்கும்
''KARNIVAL KERJAYA ISTIMEWA நிகழ்ச்சியும் ஷா ஆலாமில் நடத்தியுள்ளோம். மாநிலத்தில் மாற்றுத்திறனாளி வர்த்தக்கத்தினருக்கும் வேலை வாய்ப்பினை உறுதி செய்ய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக'' சிலாங்கூர் எஃப் எம் வானொலிக்குப் பேட்டி அளித்த போது பாப்பாராய்டு குறிப்பிட்டார்.




