ad

சபா தேர்தல் வேட்பு மனு தாக்கல் சுமூகமாக நடைபெற்றது, எந்தப் போலீஸ் புகாரும் பதிவு செய்யப்படவில்லை

16 நவம்பர் 2025, 2:18 AM
சபா தேர்தல் வேட்பு மனு தாக்கல் சுமூகமாக நடைபெற்றது, எந்தப் போலீஸ் புகாரும் பதிவு செய்யப்படவில்லை

கோத்தா கினபாலு, நவ. 15 — 17வது சபா மாநிலத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று சுமூகமாக நடைபெற்றது, முழு நேரத்திலும் எந்தப் போலீஸ் புகாரும் பெறப்படவில்லை என்று சபா போலீஸ் கமிஷனர் டத்தோ ஜவ்தே டைகுன் தெரிவித்தார்.

அனைத்து வேட்பாளர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும்,தேர்தல் வேட்பு மனு தாக்கல் செயல்முறை எந்த  இடையூறுமின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக வலுவான அர்ப்பணிப்பைக் காட்டியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்தினார்.

“எல்லாத் தரப்பினரையும் இந்தத் தொழில்முறை பண்பாடுகளைத் தொடர்ந்து காத்து, இந்தத் தேர்தல் நவம்பர் 29 அன்று வாக்குப்பதிவு செயல்முறை முடிவடையும் வரை எந்த அசம்பாவிதங்களும்  இன்றி, எந்தப் போலீஸ் புகாருமின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்தி, வரலாறு படைக்க ஒன்று சேர்ந்து செயல்படுமாறு வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறினார்.

இன்று இங்குச் சபா மாநில போலீஸ் தலைமையகத்தில் மாநிலத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாள் நடவடிக்கைகள் குறித்த பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார்.

தேர்தல் ஆணையம் சபா மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நவம்பர் 29 என்று நிர்ணயித்துள்ளது, அதேசமயம் முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 25 நடைபெறும்

ஜவ்தே, தேர்தல் வேட்பு மனு தாக்கல் அன்று அமலாக்க நடவடிக்கைகள் அதிகாலை 5 மணிக்குத் தொடங்கியதாகவும், மாநிலம் முழுவதிலுமுள்ள 25   வேட்பு மனு தாக்கல்   மையங்களில் 4,771 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியமர்த்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

“ தேர்தல் வேட்பு மனு தாக்கல் மையங்கள் தவிர்த்து, பொதுப்  போக்குவரத்து ஓட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தவும்  ராயல் மலேசியா போலீஸ் (பிடிஆர்எம்) அதிகாரிகள்  பல இடங்களுக்குப் பணியாளர்களை அனுப்பி வைத்தனர்., 

அவர், அனைத்துப் பாதுகாப்பு பணியாளர்கள், குறிப்பாகப் போலீசாருக்கு, உயர் தொழில் முறை தன்மையைக் காட்டிய, அனைத்துத் தரப்பினரின் திருப்திக்கு ஏற்ப ஒழுங்கை வெற்றிகரமாகப் பராமரிப்பதற்காக நன்றியைப் பதிவு செய்தார்.

ஜவ்தே, பிரச்சார ஏற்பாட்டாளர்கள், குறிப்பாக மக்கள் வாழும் பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு, முன்கூட்டியே போலீசிடமிருந்து அனுமதிகளைப் பெறுமாறும் மீண்டும் நினைவூட்டினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.