ஷா ஆலம், நவ 14 – நாளை சிப்பாங்கில் உள்ள பூச்சோங், புத்ரா பெர்டானா சமூக மண்டபத்தில் சிலாங்கூர் ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இத்திட்டம், மாற்றுத்திறனாளிகள் உட்பட வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சி 29 வேலை வழங்குநர்களை ஒருங்கிணைத்து, சில்லறை மற்றும் விற்பனை, தகவல் தொழில்நுட்பம் (ICT), நிர்வாகம், மனித வளம் மற்றும் உணவு, பான (F&B) சேவைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் மொத்தம் 4,797 காலிப் பணியிடங்களை வழங்குகிறது என மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
ஆர்வமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் மூலம் https://forms.office.com/r/5AMFQT3crf?origin=lprLink பதிவு செய்யலாம் மற்றும் நேர்காணல் நாளில் தொடர்புடைய சான்றிதழ்களின் நகலைக் கொண்டு வர வேண்டும்.




