கோலாலம்பூர், நவ 13- சபாவுக்கான 40 விழுக்காடு சிறப்பு மானியம் குறித்த விவகாரம் சபாவில் நடைபெறவிருக்கும் மாநில தேர்தலைப் பாதிக்காது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.
இந்நிலையில் சபா மாநில அரசாங்கத்துடன் இணைந்து சுமூகமான பேச்சுவார்த்தையை நடத்த தமது தலைமையிலான அரசாங்கம் தயாராக உள்ளதாக நிதியமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.
சபா மாநிலத்திற்கான 40 விழுக்காடு சிறப்பு மானியம் வழங்கப்பட வேண்டும் என்று கோத்தா கினாபாலு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பினை கூட்டரசு அரசாங்கம் எதிர்த்து மேல்முறையீடு செய்யாது என்று பிரதமர் அன்வார் மக்களவையில் திட்டவட்டமாக தெரிவித்தார்.




