ad

சபாவுக்கு 40% வருமானம் விவகாரம்; கூட்டரசு கொள்கையை மதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்க்கத்தக்கது- டத்தோஶ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி தகவல்

13 நவம்பர் 2025, 4:04 AM
சபாவுக்கு 40% வருமானம் விவகாரம்; கூட்டரசு கொள்கையை மதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்க்கத்தக்கது- டத்தோஶ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி தகவல்

கோலாலம்பூர், நவ 13- சபா மாநிலத்தின் வருவாயில் இருந்து 40% சிறப்பு மானியம் வழங்கும் கொள்கையை மத்திய அரசு மதிக்கும் முடிவை தாம் கட்சி வரவேற்றுள்ளதாக நாட்டின் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் மத்திய அரசு எடுத்த முடிவு சரியான நடவடிக்கை என்றும், இது கூட்டாட்சி (federalism) உணர்வுக்கு இயங்குவதாகவும், நீண்ட காலமாக உறுதிசெய்யப்பட்ட சபா மக்களின் உரிமைகளை மதிப்பதாகவும் உள்ளதாக அவர் கூறினார்.

இந்தச் சிறப்பு மானியத்தை முழுப் பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதற்காக, சபா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை செயல்முறையை உடனடியாக தொடங்க சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையும் BN கவனத்தில் கொண்டுள்ளது.

மேலும், ஆரம்பத்திலிருந்தே தனது தலைமையிலான BN எப்போதும் சபா மக்களின் நலன்களை நிலை நிறுத்துவதாகவும், ஒப்பந்தங்கள் மற்றும் அரசியலமைப்பில் பொறிக்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதாகவும், மத்திய அரசின் ஒவ்வொரு உறுதிப்பாடும் நீதியுடனும் பொறுப்புக்கூறல் உடனும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதாகவும் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.

மலேசியா ஸ்திரத்தன்மையுடனும், செழிப்புடனும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, சபா மற்றும் பிற மாநிலங்களின் உரிமைகளுக்காக சட்ட கட்டமைப்பின் படியும் அரசியலமைப்பின் உணர்வின்படியும் BN தொடர்ந்து போராடும் என்றும் அவர் உறுதியளித்தார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.