கோத்தா கினாபாலு, நவ 12- 17ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தலில் ஸ்டார் (PARTI SOLIDARITI TANAH AIRKU) கட்சி 40 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த தகவலை அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் ஜெஃப்ரி கித்திங்கான் அறிவித்தார்.
முதல்கட்டமாக 29 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட வேளையில் மீதமுள்ள 11 வேட்பாளர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று சொன்னார்.
எதிர்வரும் சனிக்கிழமை 17ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெறவுள்ளது.
முன்கூட்டியே வாக்களிப்பு நவம்பர் 25ஆம் தேதியும் வாக்களிப்பு தினம் நவம்பர் 29ஆக மலேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.




