ஷா அலம், நவம்பர் 10 — சிலாங்கூர் மாநில சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) நேற்று காஜாங்கில் உள்ள சுங்கை பாலக் டோல் பிளாசாவில் நடத்திய சிறப்பு வணிக வாகன நடவடிக்கைகளில் ஒரு வெளிநாட்டு ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சோதனையின் போது, ஐக்கிய நாடுகள் அகதி ஆணைய (UNHCR) பாஸ் கொண்டிருந்த ஆடவர் பல முக்கிய குற்ற பின்னனி கொண்டுள்ளது கண்டறியப்பட்டது. அதில் தொழில்முறை ஓட்டுநர் உரிமம் (GDL) இல்லாமை, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் (CDL) இல்லாமை மற்றும் வாகனத்தில் தொழில்நுட்ப குறைகள் ஆகியவை அடங்கும்.
மேலும் வெளிநாட்டு சாரதிகள் உட்பட அனைத்து வர்த்தக வாகன ஓட்டுநர்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,” என்று JPJ கூறியுள்ளது.
இந்த நடவடிக்கை, சிலாங்கூரில் உள்ள அனைத்து வர்த்தக வாகனங்களும் சாலை விதிமுறைகளையும் சட்டங்களையும் பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகும். இது, உரிய உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் போக்குவரத்து தொடர்பான குறைகள் அல்லது தகவல்களை aduantrafik@jpj.gov.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்,” என்று JPJ அறிவித்துள்ளது.




