கோல கங்சார், நவ 10- மலேசியப் போக்குவரத்து அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ ஜன சந்திரனுக்கு டத்தோ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பேராக் மாநில சுல்தானின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது டி.பி.எம்.பி எனப்படும் (DARJAH DATO PADUKA MAHKOTA PERAK) விருதை மேன்மை தங்கிய பேராக் மாநில ஆட்சியாளர், சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா வழங்கி சிறப்பித்தார்.
இவ்வேளையில் மலேசியப் போக்குவரத்து அமைச்சு சார்பாக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது.
மாண்புமிகு டத்தோ விருது பெற்ற, டத்தோஶ்ரீ அவர்கள் போக்குவரத்துத் துறை மற்றும் நாட்டின் வளர்ச்சியினை வலுப்படுத்துவதில் ஆற்றிய சிறந்த சேவை மற்றும் தலைமைத்துவத்திற்கான அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.




