ஷா ஆலாம், நவ 8- நாட்டிலுள்ள இந்திய சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால் கல்வியால் மட்டுமே அது சாத்தியமாகும். கல்வி செல்வம் ஒன்றே நமது சமூகத்தை மேம்பட்ட சமூகமாக உருமாற்றம் அடைய வழிவகுக்கும் என்று சிலாங்கூர் மாநில மனிதவளம், வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றிப்பெற வேண்டுமென்றால் எந்தவொரு சூழலிலும் கல்வியைக் கைவிடக்கூடாது. நாம் நமது வாழ்க்கை தரத்தைக் கல்வியின் மூலம் மாற்றம் காணலாம்.
அதற்கு எடுத்து காட்டாக தான் இரு பட்டப்படிப்பு கல்வி தகுதி கொண்டிருந்ததால் இன்று ஆட்சிக்குழு உறுப்பினராக உங்கள் முன் இருக்கிறேன் என்று ஷா ஆலாமில் நடைபெற்ற மாநில அரசின் பள்ளி பேருந்து கட்டண உதவி திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பாப்பாராய்டு இவ்வாறு தெரிவித்தார்.
மாணவர்கள் கவனமுடன் கல்வியை அணுகி வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும் என்று அவர் கருத்துரைத்தார்.




