ஷா ஆலம், நவ 7 - இன்று காலை 10 மணி வரை சிலாங்கூரில் உள்ள 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவை சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங், சிப்பாங், உலு லங்காட் மற்றும் கோலா லங்காட் ஆகிய மாவட்டங்கள் ஆகும்.
இதே வானிலைதான் கோலாலம்பூர், புத்ராஜெயா, பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை கூறியது.
பொதுமக்கள் வானிலை மாற்றத்திற்கு ஏற்ப எச்சரிக்கையுடன் இருக்கவும், வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு http://www.met.gov.my, சமூக ஊடக வலைத் தளத்தை நாடலாம்.




