பெட்டாலிங் ஜெயா, நவ 4- ஹரிமாவ் மலாயா அணிக்காக விளையாடும் ஏழு மரபுவழி விளையாட்டாளர்கள் சர்ச்சைகள் குறித்து மலேசிய காற்பந்து சங்கமான FAM மேற்கொண்ட மேல்முறையீட்டை அனைத்துலக காற்பந்து சம்மேளனமான FIFA நிராகரித்துள்ளது.
போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றத்திற்காக ஃபிஃபாவின் மேல்முறையீட்டுக் குழு இதனை நிராகரித்துள்ளது.
ஏழு மரபுவழி காற்பந்து வீரர்களான கேப்ரியல் பெலிப் அரோச்சா, ஃபாகுண்டோ தாமஸ் கார்சஸ், ரோட்ரிகோ ஜூலியன் ஹோல்காடோ, இமானோல் ஜேவியர் மச்சுகா, ஜோவா விட்டோர் பிராண்டாவோ ஃபிகுயிரேடோ, ஜான் இராசாபல் இரார்குய், ஹெக்டர் அலெஜான்ட்ரோ ஹெவெல் செரானோ ஆகியோரின் மேல்முறையீடு சமர்ப்பிப்புகள் மற்றும் நடத்தப்பட்ட விசாரணை நடவடிக்கைகளுக்குப் பிறகு முழுமையாக நிராகரிக்கப்பட்டதாக நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஃபிஃபா இன்னும் மலேசிய கால்பந்து சங்கத்துக்கு 1.8 மில்லியன் ரிங்கிட் அபராதமும் ஏழு வீரர்களுக்கான 12 மாத இடைநீக்கமும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.




