ஷா ஆலம், நவ 3: பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழைய அல்லது பராமரிக்கப்படாத வாகனங்கள் தொடர்பாக சமூக புகார் மேலாண்மை அமைப்பு (SISPAA) மூலம் புகார் அளிக்குமாறு ஷா ஆலம் மாநகராட்சி (எம்.பி.எஸ்.ஏ) கேட்டுக்கொண்டுள்ளது.
இது மக்கள் நலனையும், விதிகளுக்கும் சட்டங்களுக்கும் ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளும் சூழலையும் உறுதிப்படுத்த உதவும்
“பழைய அல்லது பராமரிக்கப்படாத வாகனங்கள் சுற்றுச்சூழல் அழகை கெடுப்பதோடு கொசுக்கள் வளர்வதற்கான மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் வைக்கப்படும் இடமாகவும், பாதுகாப்பிற்கு ஆபத்தாகவும் இருக்கலாம்.” என எம்.பி.எஸ்.ஏ குறிப்பிட்டது.
இந்த வாகனங்களை அகற்றுவதன் மூலம் நகரை சுத்தமாக மற்றும் பாதுகாப்பாக வைத்திருப்பதில் உறுதியாக செயல்படுவதாக எம்.பி.எஸ்.ஏ தெரிவித்துள்ளது.
மேலும், “நகர் மக்கள் SISPAA மூலம் புகார் அளித்து உடனடி நடவடிக்கைக்கு உதவ வேண்டும். நமது பகுதியில் பழைய அல்லது பராமரிக்கப்படாத வாகனங்கள் குவியாமல் இருக்க வேண்டும்.” என எம்.பி.எஸ்.ஏ வலியுறுத்தியது.




