ad

நவம்பர் 15 முதல்: வாகன அனுமதி (VEP) இல்லாத வெளிநாட்டு வாகனங்கள் மலேசியாவை விட்டு வெளியேற தடை

1 நவம்பர் 2025, 5:19 AM
நவம்பர் 15 முதல்: வாகன அனுமதி (VEP) இல்லாத வெளிநாட்டு வாகனங்கள் மலேசியாவை விட்டு வெளியேற தடை
நவம்பர் 15 முதல்: வாகன அனுமதி (VEP) இல்லாத வெளிநாட்டு வாகனங்கள் மலேசியாவை விட்டு வெளியேற தடை
நவம்பர் 15 முதல்: வாகன அனுமதி (VEP) இல்லாத வெளிநாட்டு வாகனங்கள் மலேசியாவை விட்டு வெளியேற தடை
நவம்பர் 15 முதல்: வாகன அனுமதி (VEP) இல்லாத வெளிநாட்டு வாகனங்கள் மலேசியாவை விட்டு வெளியேற தடை
ஜொகூர் பாரு, நவம்பர் 1 — வரும் நவம்பர் 15 முதல், வாகன நுழைவு அனுமதி (Vehicle Entry Permit – VEP) பெறாத அல்லது செயல்படுத்தாத வெளிநாட்டு வாகன உரிமையாளர்கள் அல்லது ஓட்டுநர்கள், குறிப்பாக சிங்கப்பூரிலிருந்து வருவோர், அனைத்து நிலுவைப் அபராதங்களை செலுத்தும் வரை மலேசியாவை விட்டு வெளியேற  அனுமதிக்கப் படமாட்டார்கள்  என சாலை போக்குவரத்து துறை (JPJ) தெரிவித்துள்ளது.

JPJ தலைமை இயக்குநர் டத்தோ’ ஐடி ஃபாட்லி ரம்லி கூறியதாவது, இந்த முழுமையான அமலாக்கம் தனியார் வாகனங்களுக்கும்   நிறுவனங்களின் தனியார் வாகனங்களுக்கும் பொருந்தும் — அதாவது VEP இல்லாதவை, காலாவதியான VEP-கள், அல்லது முன் பதிவு நிலைமையிலேயே உள்ள வாகனங்கள் அனைத்தும் இதில் அடங்கும்.

“அபராதங்கள் விதிக்கப்படும், மேலும் வாகன உரிமையாளர்கள் அவற்றைச் செலுத்தி, தங்கள் VEP பதிவை முடித்த பிறகே மலேசியாவை விட்டு வெளியேற முடியும்.

இது மலேசியா–சிங்கப்பூர் எல்லையில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க  மேற்கொள்ளப்படும் நடவடிக்கை,” என்று அவர் நேற்று இரவு சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் (BSI) வெளியே நடத்திய சிறப்பு VEP அமலாக்க நடவடிக்கையைக் கண்காணித்த பின் செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, அபராதங்களை JPJ அலுவலகங்களில், JPJ மொபைல் கவுண்டர்கள், டாங்கா பே (Danga Bay) VEP பதிவு கவுண்டரில்  அல்லது myEG ஆன்லைன் தளத்தின் மூலம்  செலுத்தலாம்.

ஐடி ஃபாட்லி கூறியதாவது, இதற்கு முன்பு அமலாக்க நடவடிக்கைகள் வெளிநாட்டு வாகன ஓட்டுநர்கள் அல்லது உரிமையாளர்களுக்கு  அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குவதற்கு மட்டுப்பட்டிருந்தன.

“முன்பு எங்கள் நடவடிக்கைகள் ஜொகூருக்குள் மட்டுமே இருந்தன, ஆனால் இப்போது தேசியளவில் விரிவுபடுத்தப் பட்டுள்ளன. மலேசியாவின் எந்தப் பகுதியாக இருந்தாலும், VEP இல்லாத சிங்கப்பூர் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் கண்டு பிடிக்கப் பட்டால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

அவர் கூறியதாவது, VEP அமலாக்கம் ஜூலை 1 தொடங்கியதிலிருந்து, மொத்தம் 3,03,183 தனியார் வாகனங்கள் மீது ரேடியோ ஃப்ரீக்வென்சி அடையாள (RFID) குறிகள் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் 31,643 நிறுவன வாகனங்களும் அதே முறையில் பதிவு செய்யப் பட்டுள்ளன.

இந்த காலத்தில், அதிகாரிகள் மொத்தம் 55,486 வாகனங்களை ஆய்வு செய்துள்ளனர், மேலும்  VEP இல்லாத 4,028 வாகனஉரிமையாளர்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது -மொத்தம் RM 1.2 மில்லியன் தொகை வசூலிக்க பட்டுள்ளது.

தாமன் மாஸ் மற்றும் புத்ரா பிரிமா பகுதியில் திடீர் வெள்ள அபாயத்தை குறைக்கும் நோக்கில்  வடிகால் மேம்பாட்டு பணிகள் – சிப்பாங் நகராண்மைக்கழகம்பூச்சோங், நவம்பர் 1 — சிப்பாங் நகராண்மைக்கழகம் (MPSepang), அடிக்கடி கனமழை பெய்யும் போது ஏற்படும் திடீர் வெள்ள அபாயத்தை குறைக்கும் நோக்கில் தாமான் மாஸ் மற்றும் புத்ரா பிரிமா பகுதிகளின் முக்கிய வடிகால் அமைப்பில் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பணிகள் குறித்து நகரசபை உறுப்பினர் மொஹ்த் நஸ்ரி சோஹோட்  தெரிவித்ததாவது,RM3 மில்லியன் மதிப்பிலான இந்தத் திட்டம் பழைய வடிகால்கள் அதிக அளவு மழைநீரை ஏற்கக்கூடிய பெரிய U-வடிவ வடிகால்களாக மாற்றுவதை உள்ளடக்கியதாகும்.
“முந்தைய வடிகால்கள் சிறியதாகவும் அடிக்கடி மணல் மற்றும் குப்பைகளால் அடை பட்டவையாகவும் இருந்ததால், மழைநீர் சாலைகளுக்கு வழிந்தது.. இந்த மேம்பாட்டுத் திட்டம், மழை நீரின் ஓட்டம் சீராக நடைபெறுவதற்காக உடனடி நடவடிக்கையாக அமல்படுத்தப்படுகிறது,” என்று அவர் மீடியா சிலாங்கூர் உடன் நடைபெற்ற களப்பயணத்தின் போது தெரிவித்தார்.
நஸ்ரி மேலும் கூறியதாவது, காம்போங் ஸ்ரீ அமான் மாஸ் பகுதியும் தற்போது MPSepang கண்காணிப்பின் கீழ் இருப்பதால், வடிகால் பராமரிப்பு பணிகளை மேலும் முறையாக மேற்கொள்ள முடிகிறது.
“இந்தப் பணிகள் இரு மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. 2021 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, வடிகால் அமைப்பு மழைநீரை கையாள முடியாத நிலை ஏற்பட்டது,   அந்த நிலை மீண்டும் நிகழாதவாறு செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.”
அவர் மேலும், மக்கள் வடிகால்களின் சுத்தத்தைக் காக்கவும், குப்பை போடுவதில் இருந்து விலகவும் கேட்டுக்கொண்டார், இதனால் திட்டத்தின் நீண்டகால பயன் உறுதி செய்யப்படலாம் என்றார்.
சிப்பாங் நகராண்மைக்கழகம் “MPSepang, வரவிருக்கும் மழைக்காலத்திற்கான தயாரிப்பாக, அடைபட்ட அனைத்து வடிகால்களையும் சீரமைத்து மறுகட்டமைக்க உறுதியாக செயல்படுகிறது,” என்றார் நஸ்ரி.அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்ததாவது, இந்த மேம்பாட்டு திட்டம் திடீர் வெள்ள அபாயத்தை குறைத்து, உள்ளூர் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்தும்  என்றார்.
அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.