ad

கிளந்தான் – தாய்லாந்து எல்லைப்பகுதியில் பாதுகாப்பு சுவர் அமைக்கும் திட்டம்; RM1.5 பில்லியன் நிதி ஒதுக்கீடு

21 அக்டோபர் 2025, 8:50 AM
கிளந்தான் – தாய்லாந்து எல்லைப்பகுதியில் பாதுகாப்பு சுவர் அமைக்கும் திட்டம்; RM1.5 பில்லியன் நிதி ஒதுக்கீடு

கோத்தா பாரு, அக் 21: மலேசியா–தாய்லாந்து எல்லைப்பகுதியில், கிளந்தான் மாநிலத்தில் பாதுகாப்பு சுவரை அமைக்க அரசாங்கம் RM1.5 பில்லியன் ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளது.

இதுகுறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் (MKN) சமீபத்தில் அறிவித்துள்ளதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமாட் தெரிவித்தார். இந்த பாதுகாப்பு சுவர் தும்பாட் முதல் தானா மேரா வரை எல்லைப் பகுதி முழுவதும் சுற்றி அமைக்கப்பட உள்ளது.

சமீபத்தில், நாட்டின் தலைமைச் செயலாளர் மற்றும் ஜே.பி.எஸ் அதிகாரிகள் எல்லைப்பகுதியை பார்வையிட்டனர்.

இந்த திட்டம் குறித்து, KSN மற்றும் MKN இணைந்து கூடுதல் ஒதுக்கீடாக விவாதித்து தற்போது இதன் டெண்டர் செயல்முறையில் உள்ளது என்று இன்று நடைபெற்ற கிளந்தான் மாநில போலீஸ் தலைமையக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அமைக்கப்படும் இந்த பாதுகாப்பு சுவர் கடத்தல் மற்றும் எல்லை கடந்த குற்றச்செயல்களைத் தடுக்க மட்டுமல்லாமல், வெள்ளத்திற்கும் தடுப்புச் சுவராகச் செயல்படும் என்றார் அவர்.

முன்னதாக, கடந்த ஞாயிறன்று பெர்னாமா செய்தி நிறுவனத்தின் தகவல்படி, ரந்தாவ் பாஞ்சாங் பகுதி மக்கள், இந்த சுவர் நாட்டின் எல்லையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு வடகிழக்கு மழைக்காலத்திலும் கோலோக் ஆற்று வெள்ளப்பெருக்கிலிருந்து வீடுகள் மற்றும் வணிக இடங்களைப் பாதுகாக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

ம் மேலும் கோலோக் ஆற்றின் புவியியல் அமைப்பு குறுகியதும் ஆழமில்லாததுமானதால், செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் அல்லது சி.சி.டி.வி போன்ற மேம்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் பாரம்பரிய முறையில் பாதுகாப்பு கண்காணிப்பை மேற்கொள்ளுவது கடினமா இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.