ஷா ஆலம், அக் 17: சபாக் பெர்ணம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக சந்தேகிக்கப்படும் 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.
இந்த சம்பவம் அக்டோபர் 13 ஆம் தேதி காலை சுமார் 9.30 மணியளவில் இடைவேளையின் போது நடைபெற்றதாக சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி சூப்ரிண்டெண்டன் மட் யூசோப் அகமத் தெரிவித்தார்.
மேலும் சந்தேக நபர் அதே நாளில் சுங்கை பெசார், ஜாலான் பாரிட் பகுதியில் கைது செய்யப்பட்டார். அவருக்கு அக்டோபர் 14 முதல் நாளை வரை விசாரணைக்கு தடுத்து வைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.