கிள்ளான், அக்டோபர் 12 - கிள்ளான் புக்கிட் ராஜா சுங்கச்சாவடியின் 0.5 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் (lumba haram) ஈடுபட்ட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை மற்றும் சிலாங்கூர் கான்டிஜென்ட் JSPT-ஐச் சேர்ந்த 100 அதிகாரிகளும், தேசிய போதைப்பொருள் தடுப்பு ஏஜென்சியின் 10 உறுப்பினர்களும் இணைந்து இந்த 'ஒருங்கிணைந்த மோட்டார் சைக்கிள் நடவடிக்கை என்ற கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதுகுறித்து புக்கிட் அமான் JSPT-ன் துணை இயக்குநர் (அமலாக்கம்/போக்குவரத்துக் கட்டுப்பாடு/சமன்ஸ் மேலாண்மை) DCP முகமட் ரோசி ஜிதின் கூறுகையில், அப்பகுதியில் சட்டவிரோதப் பந்தயங்கள் மற்றும் அபாயகரமான சாகசங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 15 வயதுடைய பள்ளி மாணவர் ஒருவரும் அடங்குவார் என்றும், அவருக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.கைது செய்யப்பட்ட பெரும்பாலானோர், அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி, பிற நெடுஞ்சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டனர்.
"நேற்று இரவு 10.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை நடத்தப்பட்ட இந்த ஒருங்கிணைந்த மோட்டார் சைக்கிள் நடவடிக்கையில் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்மேலும், DCP ரோசி, பள்ளி செல்லும் பிள்ளைகள், குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தினர் இதுபோன்ற சட்டவிரோதப் பந்தய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க பெற்றோர்கள் அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.